புக்-மார்க் #1 தோட்டியின் மகன் 📚🔖

ஒவ்வொரு வருஷமும் நடக்கிற சென்னை புத்தக கண்காட்சி போகிறப்போ எல்லாம் என்ன புத்தகம் வாங்கனும்னு ஒரு ஐடியா இல்லாம தான் போவேன். அங்க ஒவ்வொரு ஸ்டாலா போய் பார்க்கிறப்போ சில புத்தகங்களோட அட்டைப்படம், தலைப்பு அல்லது முன்னுரைன்னு எது ஒன்னு என்னை கவர்ந்திழுக்குதோ அந்த புத்தகத்தை வாங்கிருவேன். அப்படி வாங்கின ஒரு புத்தகம் தான் இந்த "தோட்டியின் மகன்" புத்தகம். இந்த தலைப்புல புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில பார்த்தப்போ உடனே வாங்கிட்டேன். இந்த வார்த்தை "தோட்டி"... Continue Reading →

புக்-மார்க் 📚🔖

வணக்கம் மக்களே.. ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்பவும் ஒரு எழுத்து பயணம் ஆரம்பிச்சாச்சு. இதுவரை சினிமா, டிவி சேனல்கள், சிறுகதைகள், தொடர்கதைன்னு எழுதிட்டு இருந்தேன். இப்போ எழுதப்போறது நான் படித்த புத்தகங்கள் பற்றிய விஷயம். இதை விமர்சனம் அப்படின்னு சொல்லிட முடியாது.. அந்த புத்தகங்களை பற்றிய என்னுடைய பார்வைன்னு சொல்லுறது தான் சரியா இருக்கும். இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இதை எழுதுறேன் அப்படின்னா இப்போதான் புத்தகம் படிக்கவும், அதை பற்றி ஆலோசிக்கவும் நேரம் கிடைச்சிருக்கு.... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு: புத்தகம் !!!

ஓர் நீண்ட பயணம் !!! இந்த உலகம் எழுத்துக்களால், புத்தகங்களால், கதைகளால் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கதைகள் கேட்காத, கதைகள் சொல்லாத, கதைகள் இல்லாத எந்த ஊரும், நாடும், உலகமும் இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும்.  "What is history? His story is History." — இது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வரிகள்.உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த வரிசையில் நானும்... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 12 🚘

கொடைக்கானலில்… வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் வரதன் தன் மொபைல் போனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு சென்றது நியாபகம் வந்து மீண்டும் ஸ்டேஷன் வந்தார். அப்போது ஸ்டேஷனில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் யாரிடமோ ஃபோனில் ஏட்டும், இன்ஸ்பெக்டரும் பேசிய விஷயத்தை கூறிக்கொண்டு இருந்ததையும், இதற்கு மேல் அவருக்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்று சொன்னதையும் இன்ஸ்பெக்டர் வரதன் கேட்டுவிட்டு.. “ஹலோ மிஸ்டர்.. யார்கிட்ட இவளோ ரகசியமா... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 11

“நம்ம ஊரு லாரிகளை பார்த்தா இப்படித்தான்.. இஷ்டத்துக்கு காசு புடுங்குவாங்க” என்று புலம்பி கொண்டே லாரியை அங்கு இருந்து கிளப்பினார் ராஜபாண்டி. ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்திங்க..அதிகமா வசூல் பண்ணிட்டாங்களா ? காசு குறைச்சு பேச முடியாதா ? என்று கேட்டான் ரோஹித். இந்த ரசீதை பாருங்க தம்பி…அந்த ரசீதுல போட்டு இருக்க காசுக்கும், நம்மகிட்ட புடுங்குன காசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இவனுங்க கிட்ட பேரம் பேச முடியாது, கேக்குற காசை குடுக்காம இருந்தா நம்ம... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 10

Chapter 10 கடற்கரை பகுதி, கோவா 🏖️ அந்த கடற்கரை பகுதியில் அமைந்து இருந்த தேவாலய மணி ஓங்கி ஒலித்தது. அந்த சத்தம் கேட்டு மரங்களில் கூடி இருந்த பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தன. அலையோசை, மணியோசை, பறவைகளின் கூக்குரல்கள் என அந்த ரம்மியமான காலை பொழுது அழகாக இருந்தது. அன்றைய செய்தித்தாளை படித்தவாறு வீட்டின் வெளியே அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தார் ஃபெர்னாண்டஸ். "குட் மார்னிங் டாடி" என்று சொல்லியவாறே டீ கப்புடன் வந்து அமர்ந்தாள்... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 9

Chapter 9 “குட் மார்னிங் சார்.. ஐ’எம் ரோஹித் ஃப்ரம் சென்னை’” நான் இங்க அசிஸ்டென்ட் மேனேஜரா ஜாயின் பண்ண வந்திருக்கேன். திஸ் இஸ் மை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் சார் என்று சொல்லி மீரஜ்பூரில் உள்ள அரசு கூட்டுறவு வங்கி மேனேஜர் சுக்லாவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் ரோஹித். “ஹலோ ரோஹித்.. ஐ’எம் சுக்லா..நைஸ் டூ மீட் யூ.. பிளீஸ் சிட் டவுன்” என்று கூறி பதிலுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வாங்கி கொண்டார்... Continue Reading →

அறை எண் 303 🚪

கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டு முழித்தவன்.. மொபைலில் டைம் பார்த்த போது 1.11 என்று திரையில் காட்டியது. இந்நேரத்துல யாருடா கதவை தட்டுறது என்று யோசித்தவாறே கதவை திறக்க எழுந்து சென்றான். இவன் திறக்க போகும் முன்பு கதவை தட்டும் சத்தம் நின்று போனது. இருந்தும் கதவை திறந்து வெளியே பார்த்த போது அங்கு யாரும் இல்லை. என்னடா ஒருத்தரையும் காணும் என்று தூக்கத்தில் புலம்பி கொண்டே கதவை சாத்திக்கொண்டு வந்து மீண்டும் படுக்க... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 8

Chapter 8 போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் மாதவனின் விசாரணை ஆரம்பமானது. "டேய் முதல்ல நீ வா.. வந்து உன் பேர், விலாசம், இங்க கொடைக்கானலுக்கு என்ன திட்டத்தோட வந்திங்க எல்லாத்தையும் ஒழுங்கு மரியாதையா ஒன்னு விடாம உண்மையை சொல்லு" என்று சஞ்சய்யை பார்த்து கூப்பிட்டார் மாதவன். “சார் என்னோட பேர் சஞ்சய் என்று தன்னை பற்றி கூற ஆரம்பித்தான்.. எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி, நான் சென்னையில ஐடி கம்பெனியில வேலை பாக்குறேன். இவனுங்க செல்வா, விக்னேஷ்... Continue Reading →

சூரியன் FM 93.5 ❤️

2008'ல் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தது. அதில் முதல் படமாக 2008 ல் வெளிவந்தது காதலில் விழுந்தேன். அந்த படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் " நாக்க முக்க, தோழியா என் காதலியா.." போன்ற பாடல்கள் சன் மியூசிக், சூரியன் எப்எம் போன்ற சன் ஊடகங்களில் மணிக்கு ஒருமுறை அன்றைய தினம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி அந்த படத்தின் டிரைலரும் சன் டிவி சேனல்களில் அனைத்திலும்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑